15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் தலைமறைவு!

108

கேரள மாநிலம், வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரான ஓ.என்.ஜார்ஜ் சுல்தான் பத்தேரி பஞ்சாயத்து முன்னாள் தலைவராக பதவி வகித்தார். இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சுல்தான் பத்தேரி பகுதிக்குட்பட்ட 15 வயது பழங்குடியின சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த சிறுமி சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றபோது சிறுமியின் தாயாருக்கு தெரியவந்தது. சிறுமியின் பெற்றோர்  ஜார்ஜை சந்தித்து நியாயம் கேட்டபோது பணத்தை தந்து சமரசம் செய்து கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.

இதை ஏற்றுக்கொள்ளாத சிறுமியின் பெற்றோர் ஜார்ஜ் மீது போலீசில் புகார் அளித்தார். சிறார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் ஜார்ஜை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில்,  காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓ.என். ஜார்ஜை நீக்கியுள்ளதாக கேரள மாநில காங்கிரஸ் தலைமை இன்று பிற்பகல் தெரிவித்துள்ளது.