வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா, உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

170
Khaleda-Zia

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா, உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டாக்கா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதியுற்று வந்தார்.

கலீதா ஜியாவுக்கு தேவையான சிறப்பு சிகிச்சை அளிக்க வங்கதேச அரசு நிர்வாகம் மறுத்து, அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக டாக்கா ஐகோர்ட்டில் வழக்கறிஞர் முறையிட்டார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு தேவையான உயர் சிகிச்சை அளிக்குமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று முன்தினம் அவர், டாக்காவில் உள்ள வங்க பந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதையடுத்து கலீதா ஜியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here