குழந்தையை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய பெண்

317

சென்னை அமைந்தகரை செனாய் நகர்  செல்லம்மாள் தெருவில் வசிப்பவர் அருள்ராஜ். இவரது மனைவி நந்தினி. இவர் தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு மூன்றரை வயசில் பெண் உள்ளது. சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறாள் குழந்தை. இந்த குழந்தையை கவனிப்பதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண்தான் அம்பிகா. வயசு 29. குழந்தையை டெய்லி ஸ்கூலுக்கு கூட்டிட்டு போய்ட்டு திரும்பவும் மதியம் அழைத்து வருவதுதான் இவரது வேலை.

நேற்று வழக்கம்போல் பள்ளியிலிருந்து குழந்தையை அழைத்து வரச்சென்ற அம்பிகாவை காணோம். குழந்தையுடன் டாடா சுமோ காரில் கடத்தப்பட்டார்.
குழந்தை உயிரோடு வேணும்னா 60 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டினர்.

விஷயம் போலீசுக்கு போனது. இது தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டது. மற்றொருபுறம் சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்யப்பட்டது.

இன்னொரு புறம் அம்பிகாவின் செல்போன் நம்பர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. வெறும் 6 மணி நேரம்தான்.  குழந்தையை கடத்திக் கொண்டு கோவளம் சென்றுவிட்டு அம்பிகா அங்கு பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் அவரையும் அவருடன் இச்சம்பவம் தொடர்பாக செங்குன்றத்தை சேர்ந்த முகமது கலிமுல்லாவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of