முட்டு சந்தில் சிக்கிக்கொண்ட கடத்தல்காரர்கள்.. அரங்கேறிய தரமான சம்பவம்..

2053

திருச்சியில் உள்ள கண்டோன்மெண்ட் வார்னர்ஸ் சாலையில் வசிக்கும் தொழிலதிபர் கண்ணப்பா என்பவரின், 12வயது மகன் வீட்டின் வெளியே சைக்கிள் ஒட்டி விளையாடிள்ளார். அப்போது, சிறுவனை நோட்டமிட்ட கடத்தல் கும்பல், காரில் கடத்திச் சென்றது.

பின்னர் சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல், 6 கோடி ரூபாய் தந்தால் சிறுவனை உயிருடன் விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயந்து போன சிறுவனின் பெற்றோர், கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் வயலூர் சாலையில் சென்று கொண்டிருப்பதை அறிந்த போலீசார் உடனடியாக வாகனத்தை பின்தொடர்ந்து சென்றனர்.

இதனால் அச்சத்தில் இருந்த கடத்தல்காரர்கள், முட்டு சந்தில் சென்று சிக்கிக்கொண்டனர். பின்னர், கடத்தல் கும்பலிடம் இருந்து சிறுவனை பத்திரமாக போலீஸார் மீட்டனர். மேலும் தப்பியோடி கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement