கிட்னி விற்பனைக்கு இருப்பதாக கூறி மோசடி

121

பொது மக்களை ஏமாற்றி மோசடி நடைபெறுவதாக பிரபல தனியார் மருத்துவமனை மீது புகார் வந்து கொண்டே இருந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணையில் மர்ம நபர்கள் இந்த மருத்துவமனையின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், தனிப்படை அமைத்து தேடிய நிலையில் 2 வெளி நாட்டினர் உட்பட, 6 பேரை பானஸ்வாடி போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் பெயரில் போலி இணைய தளத்தை உருவாக்கி நூதன முறையில் 300-க்கும் மேற்பட்டவர்களிடம், மோசடி செய்திருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இவர்களிடம் இருந்து பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of