சென்னை பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் : கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் மறுப்பு

271

சென்னையில் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து தற்போது சென்னையிலும் பெண் ஒருவருக்கு இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் வசந்தா மணி தெரிவிக்கையில், “முறையாக பரிசோதனை செய்து தான் கர்ப்பிணி பெண்ணிற்கு ரத்தம் கொடுத்ததாகவும் அவர்களுக்கு எச்.ஐ.வி நெகடிவ் ரத்தம் தான் ஏற்றப்பட்டது என்றும் அவர் மாங்காடு அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்பட்டது குறித்த ஆதாரங்கள் எதுவும் அவரிடம் இல்லை என்றும் தங்கள் தரப்பில் எந்த தவறும் நடக்கவில்லை என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும்” என்று தெரிவித்தார்.