அமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் இரண்டாவது முறையாக சந்திப்பு

401

கடந்த ஆண்டு ஜூன் மாதம் டிரம்ப் – கிம் ஆகியோர் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து இருநாட்டு தலைவர்களும் மீண்டும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது. பல கட்ட ஆலோசனைக்கு பிறகு வியட்நாம் தலைநகர் ஹனோயில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் நேற்று இரவு சந்தித்தனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இரவு விருந்தில் பங்கேற்றனர்.

டிரம்ப்-கிம் வருகையை முன்னிட்டு வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய ராணுவமும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of