அமெரிக்காவின் பொருளாதார தடை நீடித்தால் பாதை மாறுவோம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தியதால், வடகொரியா மீது ஐ.நா மற்றும் அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்தன.  கடந்த ஆண்டு சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேசியதால், இருநாடுகள் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் அமெரிக்கா வாக்குறுதி அளித்தபடி பொருளாதார தடைகளை நீக்காவிட்டால், பாதை மாறுவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement