அஸ்வினின் சுழலும், அதிரடியும்.., ராஜஸ்தானை மீண்டும் வீழ்த்திய ‘பஞ்சாப்’

184

அனல் பறக்கும் 12 வது ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மொகாலியில் பல பரிட்சை மேற்கொண்டனர். இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

பின்பு முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியன் அதிரடி ஆட்டகாரர்களான கிறிஸ் கெயில், லோகேஷ் ஆரம்பம் முதலே சற்று நிதானத்துடன் விளையாடத்தொடங்கினர். இதில் கிறிஸ் கெயில் சிக்சர் அடித்து தன்னுடைய அதிரடியை தொடங்கினார். பஞ்சாப் அணியின் இந்த அதிரடி தொடரவில்லை ஒரு புறம் விக்கெட்டுகளையும், மறு புறம் ரன்களையும் சேர்க்க தொடங்கினர்.இதில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவிற்கு 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்தனர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 52 (47) ரன்கள், டேவிட் மில்லர் 40 (27) ரன்கள், கிறிஸ் கெய்ல் 30 (22) ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட் மற்றும் இஷ் சோதி, ஜெய்தேவ் உனட்கட், தவால் குல்கர்னி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 23 ரன்களில் (17 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார்.அடுத்து சஞ்சு சாம்சனும், ராகுல் திரிபாதியும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள் ஆடிய விதம் அந்த அணிக்கு நம்பிக்கை அளிப்பது போல் இருந்தது. ஸ்கோர் 97 ரன்களை (11.4 ஓவர்) எட்டிய போது இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பிரித்தார். அவரது பந்து வீச்சில் சாம்சன் (27 ரன்) கிளன் போல்டு ஆனார்.

அதன் பிறகு பஞ்சாப் பவுலர்கள் கொடுத்த நெருக்கடியில் ராஜஸ்தான் திகைத்து போனது. திரிபாதி 50 ரன்னிலும் (45 பந்து, 4 பவுண்டரி), அறிமுக வீரர் டர்னர் ரன் ஏதுமின்யும், ஜோப்ரா ஆர்ச்சர் 1 ரன்னிலும், கேப்டன் ரஹானே 26 ரன்னிலும் வீழ்ந்தனர். கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 23 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரில் அந்த அணி ஸ்ரேயாஸ் கோபாலின் (0) விக்கெட்டை பறிகொடுத்து 10 ரன்கள் மட்டுமே எடுத்தது.

20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 9-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணிக்கு இது 5-வது வெற்றியாகும். ராஜஸ்தான் அணி சந்தித்த 6-வது தோல்வியாகும். இந்த சீசனில் 2-வது முறையாக பஞ்சாப்பிடம் தோற்று இருக்கிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of