கிறிஸ் கெய்ல் சரவெடி.., ராஜஸ்தானை வீழ்த்திய பஞ்சாப்

576

ஐபிஎல் 2019 சீசனின் 4-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பின்பு களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக ராகுல், கிறிஸ் கெய்ல் களம் இறங்கினர்.

தொடக்க வீரர்களில் ஒருவரான ராகுல்(4) சொர்ப்ப ரன்களில் வெளியேறினார். பின்பு கெய்ல் உடன் மயாங்க் அகர்வால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தங்களுடைய நிதானமாக ஆட்டத்தை வெளிபடுத்தினர். மயாங்க் அகர்வால் 22 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் ராஜஸ்தான் பந்து வீச்சிக்கு பலியானார். அதன்பின் பொருத்து பார்த்த கிறிஸ் கெய்ல் வழக்கம் போல் தன்னுடைய அசுர வேகத்தை வெளிப்படுத்தினார்.இந்த அதிரடி ஆட்டத்தால் 33 பந்தில் தன்னுடைய அரைசதத்தை பதிவு செய்தார். 16-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் தனது விக்கெட்டு பறிகொடுத்தார். கிறிஸ் கெய்ல் 47 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 79 ரன்கள் குவித்தார்.

கெய்ல் ஆட்டமிழக்கும்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் 15.5 ஓவரில் 144 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு சர்பிராஸ் அகமது உடன் பூரன் ஜோடி சேர்ந்தார். கெய்ல் ஆட்டமிழந்ததும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஸ்கோர் அப்படியே ஸ்தம்பிக்க ஆரம்பித்தது.

19-வது ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இரண்டு பவுண்டரிகள் கிடைத்தன. கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். முதல் பந்தில் பூரன் 12 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து மந்தீப் சிங் களம் இறங்கினார். கடைசி பந்தை சர்பிராஸ் அகமது சிக்ஸ் அடிக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 17 ரன்கள் கிடைத்தது.இறுதியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. சர்பிராஸ் அகமது 29 பந்தில் 46 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்பு 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ரஹானே, பட்லர் ஆரம்ப முதலே நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.இதில் ரஹானே 27 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து வந்த சாம்சன் அவரும் 30 ரன்களில் நடையை கட்டினார். விக்கெட் ஒரு புறம் விழுந்து கொண்டு இருந்தாலும் மறுபுறம் பட்லர் அணிக்காக ரன்களை குவித்து கொண்டு இருந்தார்.

அவரும் அஸ்வினிடம் ரன் அவுட் ஆனார். பின்பு வந்த அணைத்து வீரர்களும் சொர்ப்ப ரன்களில் அவர்களது விக்கெட்டுகளை இழக்கத்தொடங்கினர். இறுதியாக 20 ஓவர் முடிவிற்கு ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தனர்.

இப்போட்டியில் பஞ்சாப் சார்பில் கர்ரன், ரஸ்மான், ராஜ்புட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். அஸ்வின் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

Advertisement