காக்கா யோகா செய்யும் முதல்வர்! கலாய்க்கும் கிரண்-பேடி!!

575

பாண்டிச்சேரி முதலவரின் தர்ணா போராட்டத்தை காக்கா யோகா என ஆளுனர் கிரண்பேடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுவையில் ஆளுனர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி இடையேயான பனிப்போர் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. ஆளுனருக்கு எதிராக முதல்வர் தொடர்ச்சியாக 6வது நாளாக தர்ணா போராட்டம் நடத்திவருவது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாராயணசாமியின் போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே முதல்வரின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என திட்டவட்டமாக கூறிய கிரண்பேடி, டிவிட்டரில் தர்ணா செய்வது ஒருவகையான யோகா தான் என குறிப்பிட்டு இரு காகங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதே போல் தலைமை செயலகத்தில் வாயிலில் பூனை படுத்திருப்பது போலவும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆளுனரின் இந்த பதிவு கடும் சர்ச்சையைக்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of