புதுச்சேரியில் அரசு பேருந்துகளில் குறைகள் இருந்தால் பயணிகள் புகார் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழக பணிமனையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இரண்டாவது முறையாக ஆய்வு செய்தார். அப்போது பயணிகளின் இருக்கைகள் மற்றும் கைப்பிடிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். டிக்கெட் இல்லாத பயணம், நிதிக் கசிவு போன்றவற்றை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். பயணிகளிடம் இருந்து புகார் மற்றும் கருத்துக்களை அறிய தனி வாட்ஸ்-அப் எண்ணை பேருந்துகளில் ஒட்ட கிரண்பேடி ஆலோசனை வழங்கினார். இதன் அடிப்படையில் 944356717 அல்லது 9500560001 என்ற எண்ணை பேருந்துகளின் உள்ளே ஒட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of