தடையை மீறி விவசாயிகள் போராட்டம்: போலீசார் தடியடியால் பரபரப்பு

461

விவசாய விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை, விவசாய கடன் தள்ளுபடி, மின்சார கட்டண குறைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதிய விவசாயிகள் அமைப்பு (பிகேயு) சார்பில் 23-ம் தேதி விவசாயிகள் 10 நாள் பேரணியை ஹரித்துவாரில் தொடங்கினர். விவசாயிகள் டிராக்டர்கள், பேருந்துகள், சிறு வாகனங்களில் பேரணியாக டெல்லியை நோக்கி வந்தனர்.

விவசாயிகள் காசியாபாத், டெல்லி-உத்தரப்பிரதேசம் தேசிய நெடுஞ்சாலையில் பேரணியாக செல்ல முயன்றபோது போலீஸ் அனுமதி மறுத்தது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைக்க முயன்றதுடன், கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடியும் நடத்தியதால் அங்கு பதற்றமான நிலை காணப்படுகிறது.

மேலும் டெல்லிக்குள் விவசாயிகள் வந்து சேருவதை தடுக்கும் வகையில், டெல்லி உத்தர பிரதேச மாநில எல்லை மூடப்பட்டுள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, டெல்லி மற்றும் உத்தர பிரதேச எல்லையில் விவசாயிகளின் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில், போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்க முயன்றனர். மேலும் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் கலைக்க முற்பட்டதால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.

இதனிடையே மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று, மோடி அரசு நாங்கள் பிரிட்டிஷ் அரசை விட வேறுபட்டவர்கள் கிடையாது என நீருபணம் செய்துள்ளது என எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். மேலும் மத்திய அரசின் உத்தரவின் கீழ் டெல்லி போலீசார் செயல்படுவதாக குற்றம் சாட்டிவருகின்றனர். விவசாயிகளை டெல்லிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி மாநில அரசு கூறியுள்ளது.

இதற்கிடையே இப்பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. விவசாயிகள் தரப்பிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளார். அப்போது, விவசாயிகளின் 9 கோரிக்கைகளில் 7 கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of