கொடைக்கானலில் விடுதிகள் கிடைக்காமல் சுற்றுலாப்பயணிகள் தவிப்பு

184

கொடைக்கானலில் கடந்த 4 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளுமையான நிலை உருவாகி உள்ளது. இதனால் காலையிலிருந்தே சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்தது.பிரையண்ட் பூங்கா, படகுக் குழாம், பில்லர் ராக்  பசுமைப் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக கூடியதால் வாகனங்கள் நகர முடியாமல் ஸ்தம்பித்து நின்றன.

இயற்கை எழில் காட்சிகளை முழுமையாக கண்டுரசிக்க முடியாமல்  மேலும் தங்குவதற்கு அறைகள் கிடைக்காததால் சுற்றுலாப்பயணிகள் தவித்தனர். கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் பலருக்கு விதிமீறல் கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டது தெரியாமல் வழக்கம்போல் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of