கோடநாடு வீடியோ விவகாரம்.. மனோஜ், சயனுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

495

கோடநாடு கொலை, கொள்ளையில் குற்றம்சாட்டப்பட்ட சயன், மனோஜ் ஆகிய இருவரும் பிணை பாதுகாப்பு வழங்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமின் நிபந்தனையை நிறைவேற்ற எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

முதல்வர் பழனிசாமி மீது அவதூறு பரப்பியதாக டெல்லி சென்று கடந்த 13-ம் தேதி சயன் மனோஜை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிடக் கோரி போலீஸார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இருவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மறுப்புத் தெரிவித்தது. மேலும் விசாரணைக்காக 18-ம் தேதி ஆஜராகும்படி உத்தரவிட்டனர். அதன்படி, இருவரும் இன்று ஆஜராகினர்.

அவர்களுக்கு பிணை பாதுகாப்பு வழங்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக டெல்லி போலீஸார் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தனர்.

இங்கு அச்சுறுத்தல் இருப்பதுபோல் உணருவதாக சயன் மற்றும் மனோஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement