மிரட்டல் காட்டும் கோலி – ரஹானே..! – இமாலய இலக்கு வைக்குமா இந்திய அணி..!

568

இந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் கடந்த 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் நிதானமாக விளையாடி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இமாலய இலக்கை வைக்க முயற்சித்து வருகிறது .

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பதும் அதன் பிறகு மேற்கிந்தியத்தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் 2வது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி 72 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 51 ரன்களும், ரஹானே 53 ரன்களும் எடுத்து அரை சதங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

முன்னதாக கேஎல் ராகுல் 38 ரன்களும், புஜாரே 25 ரன்களும் எடுத்துள்ளனர். தற்போது இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியைவிட 260 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது.

7 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் குறைந்த பட்சம் 400 ரன்கள் இலக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இலக்காக நிர்ணயிக்க இன்னும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஒரு இமாலய இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of