கோலி கொழுத்திய 100 வாலா! திணறும் ஆஸ்திரேலியா!

282

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

தொடக்க வீரர் ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் தவானுடன் கோலி ஜோடி சேர்ந்தார். கோலி – தவான் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்துவந்தது.

பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற இந்த ஜோடியை மேக்ஸ்வெல் பிரித்தார். 29 பந்துகளில் 21 ரன்கள் அடித்திருந்த தவானை மேக்ஸ்வெல் வீழ்த்தினார்.

பின்னர் வந்த வீரர்களுடன் சிறப்பாக விளையாடிய கோலி, தனது 40 வது சதத்தை பூர்த்தி செய்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of