சாதனை(ரன்)களை அடித்து நொறுக்கும் கோலி

398

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கேப்டன் விராட் கோலி தான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னும் அணியின் வெற்றிக்காம மட்டுமின்றி பலரின் சாதனைகளை முறியடிக்கவும் பயன்படுகிறது.

அந்த வகையில் இன்று நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், தனது ஒரு நாள் போட்டியில் தனது 41 சதத்தை அடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார். அதுமட்டுமின்றி, குறைந்த போட்டிகளில் நான்காயிரம் ரன்களைக் கடந்த கேப்டன்கள் வரிசையில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

இதற்கு முன்பு, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் டி வில்லியர்ஸ் 77 போட்டிகளில் படைத்த சாதனையை 63 போட்டிகளில் நான்காயிரம் ரன்களை எடுத்து முறியடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில், இந்திய முன்னாள் கேப்டன் தோனி மூன்றாம் இடத்திலும், கங்குலி நான்காம் இடத்திலும் உள்ளனர்.