“எல்லாம் என் மனைவி மட்டும் தாங்க..!” – கோலியின் பேச்சால் காண்டான தோனி ரசிகர்கள்..!

763

தன்னை சரியான பாதையில் வழி நடத்தி செல்வது, தமது மனைவி அனுஷ்காதான் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை 2017ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் கோலி.

எங்கு சென்று விளையாடினாலும், அந்த போட்டிகளில் கட்டாயம் ஆஜராகி கணவர் கோலியை உற்சாகப் படுத்துவார். பார்வையாளர்கள் தளத்திலிருந்து கோலிக்கு அவர் ஆதரவு தெரிவித்து, உற்சாகமூட்டுவார். தொலைக்காட்சிகளில் அதை பார்க்கும் ரசிகர்கள் சில சமயம் பாராட்டியும், கேலி செய்தும் இருக்கின்றனர்.

விமர்சனங்கள் இந்த ஜோடி பற்றிய விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எக்கச் சக்கமாக வந்ததும் உண்டு. ஆனாலும், கோலி விளையாடும் போட்டிகளுக்கு அனுஷ்கா வருவது நிற்கவில்லை. இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. டிவி நிகழ்ச்சி இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடி வரும் கோலி, அங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

அதில் பேசிய அவர் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். பெரிய வரம் அவர் கூறியதாவது: அனுஷ்கா சர்மா எனது வாழ்வின் பொக்கிஷம். அவர் எனக்கு கிடைத்தது, கிரிக்கெட் என் வாழ்வில் கிடைத்ததை விட மிகப் பெரிய வரம். ஒரு சரியான துணையை தேர்வு செய்துள்ளேன்.

வழிநடத்துவது யார்?

ஏனென்றால் அவர் தனது தொழிலை தானே செய்கிறார். அத்துடன் எனக்கான இடத்தையும் முழுமையாக புரிந்து வைத்துள்ளார். என்னை சரியான பாதையில் வழி நடத்திச் செல்வது அவரே தான். அவரிடம் இருந்து நான் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது. விரைவில் கற்றுக் கொள்வேன் என்றார்.

தோனி, 2014ம் ஆண்டு டெஸ்ட் தொடரிலிருந்து கேப்டன் பதவியை துறந்தார். 2016ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கேப்டன் பதவியை கோலியிடம் ஒப்படைத்தார். என்ன தான் கோலி கேப்டனாக இருந்தாலும், களத்தில் இருக்கும் போது கிட்டத்தட்ட அணியின் அதிகாரப்பூர்வமற்ற கேப்டனாக செயல்பட்டவர் தோனி.

ரசிகர்கள் மகிழ்ச்சி பலமுறை கோலி அவரிடம் சென்றோ அல்லது அவரது ஆலோசனையின் படி தான் முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார். சமீபத்திய உலக கோப்பையில் ரசிகர்கள் கண்கூடாக பார்த்து மகிழ்ந்தனர்.

அணி இக்கட்டான சூழ்நிலைக்கு செல்லும் போதெல்லாம் விரைவாக ஓடி வந்து தோனியிடம் ஆலோசனை கேட்டுவிட்டு அதனை செயல்படுத்துவார் கோலி. அதிருப்தி கேப்டன்ஷிப் உத்திகள் பலவற்றை தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டவர் கோலி.

ஆனால் தன்னை வழிநடத்துவது மனைவிதான் என்று கூறியதால் தோனி ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர். என்ன இருந்தாலும் தோனியின் பெயரை ஏதாவது ஒரு வகையில் கூறியிருக்கலாம் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of