ஊரடங்கு உத்தரவில் மனைவியுடன் நேரத்தை கடத்தும் கோலி..!

1612

ஊரடங்கு உத்தரவு காரணமாக விராட் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் வீட்டில் சுய தனிமைப்படுத்தல் காரணமாக வீட்டில் உள்ளனர்.

தினம் தினம் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என இருவரும் இணைந்து விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது அனுஷ்கா கோலிக்கு தலைமுடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதற்கு கோலி இதுதான் எங்களுடைய தனிமைப்படுத்தப்பட்ட நிலை என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை அனுஷ்கா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தனிமையிலும் காதலை எப்படியெல்லாம் வளர்க்கலாம். கணவன் மனைவி இருவரும் எப்படி காதலை அதிகரிக்கலாம், நெருக்கத்தை எப்படி அதிகரிக்கலாம், அதற்கு இந்த பொன்னான தருணத்தை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்கு இந்த காதல் ஜோடியின் பதிவு சிறந்த உதாரணம்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of