நம்பி ஏமாந்த நயன்தாரா

719

அறம், டோரா படங்களுக்குப் பிறகு நயன்தாரா கோலமாவு கோகிலா என்கிற படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார்.இப்படமும் வெளியாகியது, இந்த படம் நிறைய எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தபோதும், தமிழ்நாட்டில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில், கடந்த 31-ஆம் தேதிஅன்று கோ கோ கோகிலா என்ற பெயரில் இப்படம் தெலுங்கில் வெளியிடப்பட்டது.நயன்தாராவின் நடிப்புக்கு கைதட்டல் கிடைத்தபோதும், இப்படத்திற்கு பெரிதாய் வரவேற்பு இல்லையாம். தெலுங்கில் இப்படம் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நயன்தாராவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.