“தீய சக்திகளிடமிருந்து உலகை காக்க தயாராக இருக்கிறாள் கோர்”

198

அடல்ட் படங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகை சன்னி லியோன், ஆனால் சமீப காலமாக அவர் அடல்ட் படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்தியில் தொடங்கி தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள் வரை நடித்துவிட்டார்.

தற்போது அவரும் அவரது கணவரும் இணைந்து “கோர்” என்ற படத்திற்கான கதையை தயாரித்து வருகின்றனர். தற்போது அதற்கான வீடியோ ஒன்றை சன்னி வெளியிட்டிருக்கிறார். அதில், ‘கோர் இந்த கிரகத்தை சேர்ந்தவள் இல்லை. ஆனாலும் தீய சக்திகளிடமிருந்து உலகை காக்க தயாராக இருக்கிறாள்’ என தெரிவித்துள்ளார்.

கோர் கதாபாத்திரம் பற்றி சன்னி லியோன் கூறும்போது, ‘சூப்பர்வுமன் கதையை நானும் எனது கணவர் டேனியல் வெப்பரும் இணைந்து உருவாக்கி னோம். அந்த வகையில் கோர் கதாபாத்திரம் தீய சக்திகளை அழிக்க வருகிறது’ என்றார்.