ஆந்திரா TO தமிழ்நாடு… எல்லையை தொட்ட கிருஷ்ணா நதிநீர்

402

ஆந்திராவில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையை வந்தடைந்தது.

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படவேண்டும்.

அந்த ஒப்பந்தத்தின்படி இந்த பருவத்திற்கான தண்ணீர் கடந்த 18-ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு  1500 கன அடி திறந்து விடப்பட்டது. அது தற்போது கண்டலேறு-பூண்டி கால்வாய் வழியாக தமிழக எல்லைப் பகுதியான ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது.

இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். கிருஷ்ணா நதிநீரால் சென்னை மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படும் என்றும், இந்த பருவத்திற்கான 8 டிஎம்சி தண்ணீர் முழுமையாக கிடைக்கும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.