சூட்டைத் தணிக்க சூடு பிடித்த பதநீர் விற்பனை.!

782

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி முழுவதும் கோடை வெயில் உச்சத்தில் உள்ள நிலையில் பனை தெளிவு எனப்படும் பதநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது.

கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் இயற்கை வரமானபதநீரை பொதுமக்கள் விரும்பி வந்து வாங்கி குடிக்கின்றனர். உடல் சூட்டை தணிக்கும் உடலுக்கு நன்மை ஏற்படும் சிறிதுகூடரசாயனபதநீரை மக்கள் ஆர்வமுடன் குடித்து வருகின்றனர்.

இது குறித்து பதநீர் விற்பனையாளர்கள் கூறுகையில்ஆம்பள்ளி பகுதிஉள்ள ஏராளமான பணி மரங்களிலிருந்து சுமார் 20 லிட்டர் அளவில் பதநீஇருசக்கர வாகனத்தில் எடுத்துஅதிகாலையில் வருகிறோம். அரை லிட்டர் 20 ரூபாய் என விற்பனை செய்கிறோம்.

மக்கள் விரும்பி வாங்கி பருகி வருகின்றனர். கோடை வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும் உடல் சூட்டை தணிக்கவும் வயிற்றுப் புண் வாய்ப் புண் ஆகியவற்றை ஆற்றவும் இயற்கை அன்னையின் வரப்பிரசாதமான பதநீர் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது

பாட்டில்களில் அடைக்கப்பட்ட செயற்கை குளிர்பானங்களை பருகாமல் இயற்கையாக கிடைக்கும் பதநீரை பருக பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். எனவே 50 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து நாங்கள் மிக கடினத்துடன் எடுத்து வந்தாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி பருகுவதைபார்க்கும்போது அந்த கஷ்டம் எங்களுக்கு தெரியாமல் போகிறது என்று மகிழ்ச்சியுடன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement