7 பேரின் விடுதலை! ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்காதீங்க! அழகிரி பேச்சு!

539

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தீர்ப்பு வெளியிட்டது.

அதில் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுத்துக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இருந்தாளும், அதன் மீது இன்னும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறுகையில், 7 பேர் விடுதலை குறித்து இப்படித்தான் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க கூடாது.

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை மன்னித்து விட்டோம் என கட்சி தலைமை ஏற்கெனவே கூறிவிட்டது. எதுவாக இருந்தாலும் சரி அது சட்டத்துக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும் என்றார் கேஎஸ் அழகிரி.