“தாமாக பாஜகவில் இணைவது தற்கொலைக்கு சமம்”- கே.எஸ்.அழகிரி விமர்சனம்

630

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழ் மாநில காங்கிரஸை கலைத்து விட்டு பாஜகவுடன் சேர்ப்பதாக அன்மையில் செய்தி பரவியது.

இந்த செய்திக்கு ஜி.கே.வாசன் எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தார் இந்த நிலையில் தற்போது இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்மாநில காங்கிரஸை காங்கிரசோடு இணைக்கவேண்டும் எனவும், பாஜகவுடன் தாமாக இணைவது தற்கொலைக்கு சமம் எனவும் கடுமையாக விமரசித்துள்ளார்.

congress-ks
அதுமட்டுமல்லாமல் காமராஜர் மூப்பனார் அரசியல் நகர்வுகளை நினைவுப்படுத்திய அழகிரி, ஜி.கே.வாசன் உட்பட தாமாகவினர் காங்கிரஸில் இணையுமாறு கைக்கூப்பி கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.