களத்தில் ‘தல’ தோனியின் தவறான முடிவுகளை சுட்டிக்காட்ட முடியவில்லை.., இந்திய வீரர் பகீர் பேட்டி

912

மும்பையில் சியட் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனியின் களச் செயல்பாடுகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.அப்போது அவர் போசுகையில், களத்தில் தோனி பொதுவாக அதிகம் பேசமாட்டார் எனவும், ஏதாவது கூற விரும்பினால் மட்டுமே ஓவர்களுக்கு இடையே வந்து பேசுவார் எனவும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, களத்தில் தோனி எடுக்கும் பல முடிவுகள் தவறு எனத் தெரிந்தபோதும், அதை அவரிடம் சுட்டிக்காட்ட முடியாத சூழல் நிலவியதாகவும் குல்தீப் யாதவ் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of