‘என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு..’ – மோடி மீது குமாரசாமி சர்ச்சை கருத்து..!

599

இந்தியாவின் ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியில், ரூபாய் 1000 கோடி செலவில் சந்திரயான் 2 விண்கலம் உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம் நிலவின் தென்துருவப்பகுதிக்கு அனுப்பப்பட்டது. நிலவின் தென்துருவப்பகுதியில் கடந்த 7-ஆம் தேதி அன்று தரையிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தீடிரென சிக்னல் கிடைக்காமல் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த தோல்விக்கு, பல்வேறு அரசியல் தலைவர்களும், பல்வேறு பிரபலங்களும் விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிலையில் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி மைசூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சந்திரயான் 2 நிலவில் இறங்குவதை பார்க்க மோடி இஸ்ரோவிற்கு வருகை தரவில்லை என்றும், அதையும் ஒரு பிரச்சாரமாக பயன்படுத்திக்கொள்ளவே அங்கு வருகை தந்தார் என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், மோடியின் வருகையால் தான், அபசகுனமாக விக்ரம் லேண்டர் தரையிறங்கவில்லை என்றும், அவர் இஸ்ரோவுக்கு வராமல் இருந்திருந்தால் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி இருக்கும் என்றும் விமர்சித்தார். இந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement