நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி!

307

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சிகளின் 15 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

2 சுயேட்சைகளும் குமாரசாமிக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. நடுநிலை வகிப்பதாக கூறியுள்ளார்.

17 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை இழந்ததால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி பலம் 101 ஆக குறைந்தது. குமாரசாமி தலைமையிலான ஆட்சி பறிபோகும் நிலை ஏற்பட்ட நிலையில், இன்று சட்டசபை கூடியது.

அப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமிக்கு ஆதரவாக 95 வாக்குகளும். அரசுக்கு எதிராக 105 வாக்குகளும் பதிவாகியிருந்தது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.

மேலும், குமாரசாமி அரசின் ஆட்சி கவிழ்ந்ததால், எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of