பதவி விலகினாரா குமாரசாமி? – உச்சக்கட்டத்தில் கர்நாடக அரசியல்

439

குமாரசாமி, கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக போலியாக வெளியான கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகாவில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ க்கள் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்திருந்த நிலையில் சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால், அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார். இதற்கிடையே முதலமைச்சர் குமாரசாமி பதவியை ராஜினாமா செய்ததாக ஒரு போலியான கடிதம் பரவியது. 

இந்த நிலையில் முதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்யவில்லை என முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of