கர்நாடகா அமைச்சரவை வரும் 22ஆம் தேதி விரிவாக்கம்

259
Siddaramaiah

கர்நாடகா அமைச்சரவை வரும் 22ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் சி்த்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனத தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின்னர் பேசிய சித்தராமையா, அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்னதாக வரும் 22ஆம் தேதி அமைச்சர் விரிவாக்கம் நடைபெறும் என்று கூறினார்.

அமைச்சரவையில் புதியதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் 2 பேரும், காங்கிரஸ் கட்சியில் 6 பேரும் இடம் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.