எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருவள்ளுவரின் புகழை நிலை நாட்ட வேண்டும்! – உயர்நீதிமன்ற கிளை “நறுக்”!!

113
madurai-high-court-issue

மிகவும் பிரசதி பெற்ற சுற்றுலாதளங்களில் குமரி மாவட்ட கடற்கரையும் ஒன்று. இந்த கடற்கரை பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதியில் படகு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தடை நீக்க வேண்டும் என்று திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருவள்ளுவரின் புகழை நிலை நாட்ட வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2 வாரத்திற்கு ஓத்தி வைத்தனர்.