சாணக் குளியல்.. மாணவனுக்கு நண்பர்கள் கொடுத்த பர்த்டே கிஃப்ட்

289

குமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள பரம்பு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரின் பிறந்த நாளை, வித்தியாசமான முறையில் கொண்டாட அவரது நண்பர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து, நண்பர்கள் ஒவ்வொருவராக அவர் மீது முட்டைகளை உடைக்கின்றனர். பின்பு குங்குமத்தை கரைத்த தண்ணீரால் குளிக்க வைக்கின்றனர்.

தொடர்ந்து, தக்காளி பழத்தை அவர் மீது தேய்த்ததோடு, தயிர் பாக்கெட்டுகளையும் உடைத்து தலையில் இருந்து உடல் முழுவதும் பூசி விடுகின்றனர். உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்ற நண்பர் ஒருவர், சாணத்தை கரைத்து தலையில் ஊற்றுகிறார். இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of