கும்பமேளாவில் பதறும் உறவினர்கள்…, 50 ஆயிரம் பேர் மாயம்

331

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறும். இதில் 6 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெருவதை அரை கும்பமேளா என்பார்கள். இந்த கும்பமேளாவானது கடந்த 15 ஆம் தேதி தொடங்கி வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி முடிவடைகின்றனர்.மொத்தம் 49 நாட்கள் நடைபெரும் இந்த கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நதியான கங்கையில் நீராடி, பிராத்தனையும் செய்து வருகி்ன்றனர். இதனால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மௌனியா அமாவசையாள் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித தரிசனம் செய்வதற்காக படையெடுத்தனர், இதனால் கூட்ட நெரிசல் அதிகரித்தால் இதில் சிக்கி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகின்றனர்.

காணாமல் போனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவர்களின் உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர். இதில் இதுவரை 18 ஆயிரத்து 300 போர் காணாமல் போனதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் உதவியுடன் இதுவரை கும்பமேளாவில் காணாமல் போன 70 குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அவர்களது குடும்பத்தினருடன் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளனர்.

முந்தைய கும்பமேளாக்களில் காணாமல் போனோர் பல ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் ஒன்றிணைந்தனர். கங்கை நதிக்கரையில் 8 வாரங்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் கிட்ட தட்ட 15 கோடி பேர் புனித நீராடுவார்கள் என குறிப்பிடப்படுகின்றனர்.