அதிமுக-பாமக கூட்டணி கேவலமானது!! குஷ்பு கடும் தாக்கு!!

571

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் வருமாறு:-

செய்தியாளர்:- அ.தி.மு.க.- பா.ஜ.க.-பா.ம.க. கூட்டணி பற்றிய உங்கள் பார்வை என்ன?

பதில்:- கேவலமான கூட்டணி. நீட் தேர்வு விலக்கு, காவிரி விவகாரம் உள்ளிட்ட தமிழக பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தாத பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜனதா அரசுக்கு பூஜ்யத்துக்கு கீழ் மதிப்பெண் அளித்தவர் ராமதாஸ். இன்று அவரும் அந்த பூஜ்யத்துடன் இணைந்து விட்டார். தமிழக மக்களின் எதிர் காலத்தை மோடியிடம் அடகுவைத்து விட்டு பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது.

செய்தியாளர்:- தமிழகத்தில் நடக்கும் காங்கிரஸ் பொதுக் கூட்டங்களில் உங்களை அதிகம் பார்க்க முடியவில்லையே?

குஷ்பு:- ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், நான் இப்போதும் கட்சிப்பணிகளில் தீவிரமாக செயல்பட்டு தான் வருகிறேன். தமிழகத்தை மட்டும் மனதில் வைத்து கேள்வி கேட்காதீர்கள். பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன்.

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு இதற்கு முன்னர் தலைவராக இருந்தவர் என்னை பொதுக்கூட்டங்களுக்கு அழைத்ததில்லை. அதற்கு என்ன காரணம் என்று அவரிடம்தான் கேட்க வேண்டும். தேர்தல் நெருங்கிவிட்டதால் இனி பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்ட மேடைகளில் என்னை காணலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of