வீதியில் நின்ற மர்மம்! பீதியில் நின்ற குஷ்பு!

1674

நடிகையும் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்புவின் வீடு சென்னை சாந்தோம் பகுதியில் இருக்கிறது. குஷ்பு வீட்டு அருகே தெருமுனையில் பதிவெண் பலகை இல்லாத மர்மமான ஒரு கண்டெய்னர் லாரி 10 நாட்களாக நின்றது.

நேற்று முன் தினம் அந்த லாரியை குஷ்பு படம் பிடித்து தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டார். இந்த விஷயம் காவல்துறையின் கவனத்திற்கு வந்ததும், உடனடியாக அந்த கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுத்தனர்.

இதையடுத்து குஷ்பு அளித்த பேட்டியில் கூறியிருப்பது பின்வருமாறு:-

“போலீசாரின் உடனடி நடவடிக்கையை பாராட்டுகிறேன். அந்த லாரி என் தெரு முனையில் தான் நின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் உங்களால் கண்ணை மூடிக்கொண்டு செல்ல முடியாது.”

இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of