அரசியலை விட்டு விலகுகிறாரா குஷ்பு..? பரபரப்பை ஏற்படுத்திய டுவீட்!

660

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, சுஹாசினி ஆகியோர் நடித்த தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு.

இவரின் அபார நடிப்பாலும், அழகாலும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தார். திடீரென அரசியலில் நுழைந்த குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இனைந்து தற்போது தேசிய செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் பலரும், கட்சி பொறுப்பில் இருந்து ராஜுனாமா செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பு அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில்,

“உங்களின் அறிவுரை எனக்கு வேண்டும். நான் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன்.

நான் என் குடும்ப கடமைகளை முடித்து விட்டதால், படங்களில் நடிக்கலாம் என்ற முடிவுடன் இருக்கிறேன்.

நான் திரைப்படங்களில் நடிக்கலாமா” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த டுவிட்டுக்கு பதிலளித்துள்ள அவரது ரசிகர்கள், அவரை ஆராவாரமாக வரவேற்த்து வருகின்றனர். ஒரு சிலர் அரசியலை கைவிடப்போகிறீர்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of