தமிழ் சினிமாவை பொறுத்தவரை துணிச்சலான கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கும் நடிகைகள் குறைவாகவே உள்ளனர்.
அந்த வெகு சிலரில் ஒருவர்தான் தன்ஷிகா. இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் திரைப்படத்தில் ஆஷா என்ற கதாபாத்திரத்தில் தன்ஷிகா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.
ஜகன்நாதன் இயக்க, இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வனுடன் முதல் முறையாக கரம் கோர்க்கிறார் ஸ்ருதிஹாசன்.
அண்மையில் இந்த படத்திற்கான பூஜை முடிந்த நிலையில் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. விரைவில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.