அரசு மருத்துவமனையில் தண்ணீர் இல்லாமல் நோயாளிகள் அவதி உறவினர்கள் குற்றச்சாட்டு

198

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் பொது கழிப்பிடதில் தண்ணீர் வரதாததால் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அவதியடைந்தனர். இதனால் தண்ணீர் இன்றி கழிப்பிடத்தை பயண்படுத்தும் நிலை ஏற்பட்டதாகவும், இதனால் தொன்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து மருத்துவமனை மேற்பார்வை நிர்வாகத்திடம் புகாரளித்தும் அலட்சியமாக நடந்து கொண்டதாக நோயாளிகள் குற்றச்சாட்டினர். இது குறித்து நமது சத்தியம் செய்தி தொடர்பாளர் மருத்துவ நிர்வாகத்திடம் முறையிட்ட போது பதிலளிக்க மறுத்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு மருத்துவ நிர்வாகம் மீண்டும் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.