அறிமுகமானது “பெண்கள் பீர்”..? அப்படி-னா என்னனு தெரியுமா..?

697

மது விலக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் துடித்துக்கொண்டிருக்கும் வேளையில், ஹரியான மாநிலத்தில் குருகிராம் பகுதியில் உள்ள பப் ஒன்றில் பெண்கள் பீர் என்ற அடைமொழியுடன் ஒரு பீர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பீரை அறிமுகம் செய்து வைத்த நிறுவனம், இதுகுறித்து பேசியுள்ளது.

அதில், “பொதுவாக பீர் கசப்புத் தன்மையுடன் இருக்கும். இதனால் பெண்கள் பெரும்பாலும் பீரை குடிக்க விரும்புவதில்லை. இதனால் சுவையில் மாறுதலை கொண்டு வந்து, இந்த புது வித பீரை உருவாக்கியுள்ளோம்.

முதலில் இது சம்மர் பீர் என்ற பெயருடன் உருவாக்கப்பட்டது. பின்னர் இந்த பீரை குடிக்க வருபவர்கள், இதற்கு பெண்கள் பீர் என்று பெயர் வைத்து விட்டனர். இதனால் தற்போது இது பெண்கள் பீராகவே அழைக்கப்படுகிறது.

பொதுவாக பெண்களும் இனிமையானவர்கள் என்பதால், இந்த பீரும் பெண்கள் பீர் என்று அழைப்படுகிறது. ”

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பீர் குறித்து அறிந்த நெட்டிசன்கள், வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவுல் கிடைத்த மாதிரி என்ற பழமொழிக்கு இணங்க கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.