டும்.., டும்-க்கு ஓகே சொன்ன ‘நயன்’.., விரைவில் நிச்சயதார்த்தம்?

819

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நானும் ரவுடி தான் படத்தை இயக்கிய போது விக்னேஷ் சிவனுக்கும், அப்படத்தில் நாயகியாக நடித்த நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஒன்றாக வெளியில் சுற்றும் புகைப்படங்களை தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால், எப்போது திருமணம் என்ற கேள்விக்கு மட்டும் இருவரும் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகின்றனர்.

நயன்தாரா நூறு படங்களில் நடித்து முடித்த பிறகு தான் திருமணம் என்ற நிபந்தனை விதித்திருப்பதாகவும், அதற்கு விக்னேஷ் சிவனும் சம்மதம் சொல்லி விட்டதாகவும் இடையில் தகவல்கள் வெளியானது. ஆனால் அதற்கு விக்னேஷ் சிவனின் தாயார் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.இந்நிலையில், தற்போது இருவீட்டாரும் பேசி விரைவில் அவர்களது திருமணத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தாண்டு இறுதியில் திருமண நிச்சயதார்த்தமும், அதனைத் தொடர்ந்து அடுத்தாண்டு திருமணமும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

நயன்தாரா தற்போது ரஜினியுடன் தர்பார் படத்திலும், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களை முடித்த பிறகு அவரது திருமணம் நடைபெறும் என்கின்றனர். விக்னேஷ்சிவனும் இரண்டு படங்களை இயக்க இருக்கிறாராம்.

திருமணம் பற்றிய பேச்சுக்காகத் தான் சமீபத்தில் இருவீட்டாரும் சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. எப்படியும் கூடிய சீக்கிரம் நயன் குட் நியூஸ் சொல்வார் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of