டிராவில் முடிந்தது – ‘லா லிகா’ கால்பந்து

529
last match- draw

லா லிகா கால்பந்து தொடரில் வில்லாரில் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் மோதியது இதில் அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் செய்து முடிந்தது.

ஸ்பெயினில், உள்ளூர் கால் பந்து அணிகள் பங்கேற்கும் ‘லாலிகா’ என்ற கால்பந்து தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இதில் வில்லாரில் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் களமிறங்கியது.

முதல் பாதியில் ரியல் மாட்ரிட் அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. பின்  இரண்டாவது பாதியில் விளையாடிய வில்லாரியல் அணிக்கு சாண்டி கசோர்லா ஒரு கோல் அடித்து சமன் செய்தார். பின் ஆட்ட நேர முடிவில் கோல் யாரும் அடிக்கவில்லை. எனவே 2-2 என்ற கணக்கில் போட்டி ‘டிரா’ஆனது. இது வரை விளையாடி ரியல் மாட்ரிட் அணி 4 வது இடத்தில் உள்ளது. வில்லாரியல் அணி 17 வது இடத்தில் உள்ளது.

Advertisement