தேர்தலில் தோல்வி – ஜெயிலில் சாப்பிடாமல் கதறி அழும் லாலு பிரசாத்

524

பாராளுமன்ற தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி ஒரு இடம் கூட வெற்றி பெறாததால் சிறையில் உள்ள லாலு பிரசாத் யாதவ் சாப்பிட மறுத்து கண்ணீர் விட்டு அழுதார்.

பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா- நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கும் காங்கிரஸ்-லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணிக்கும் இடையே இந்த 40 தொகுதிகளிலும் கடும் போட்டி ஏற்பட்டது.

இந்த 40 தொகுதிகளில் பாரதிய ஜனதா – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. ஒரே ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

Image result for லாலு பிரசாத்

லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி 19 இடங்களில் போட்டியிட்டும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாள் முதல் பாராளுமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி அலை வீசியபோது கூட ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இந்த தடவை ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அந்த கட்சியின் வரலாற்றில் பாராளுமன்ற தேர்தலில் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போனது இதுவே முதல் முறையாகும்.

லாலு பிரசாத் யாதவின் மகன்கள் தேஜஸ்விக்கும், தேஜ்பிரதாப்புக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சிக்கு பீகாரில் கடும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. லாலுவின் மகன் மிசா கடும் தோல்வியை சந்தித்துள்ளார்.

ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தற்போது மாட்டுத் தீவன ஊழலில் 14 ஆண்டுகள் தண்டனை பெற்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி ஜெயிலில் இருக்கிறார். பீகாரில் தனது கட்சி ஒரு இடம் கூட ஜெயிக்காமல் படுதோல்வி அடைந்ததை அறிந்ததும் அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

Related image

பீகாரில் தீவிர அரசியலில் இருந்தவரை தனது கட்சி ஒரு தேர்தலில் கூட தோல்வி அடைந்தது இல்லை என்பதால் பாராளுமன்ற தேர்தல் தோல்வியை அவரால் ஜீரணிக்க இயலவில்லை. ஒரு நேரத்தில் பீகாரில் பெரும்பான்மையான தொகுதிகள் அவரது வசமே இருந்தன. சட்டசபையிலும் அவரது கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்தது.

ஆனால் சட்டசபை தேர்தலிலும் சமீப காலமாக அவரது கட்சிக்கு இறங்கு முகம் ஏற்பட்டு உள்ளது. இதனால் லாலு பிரசாத் ஜெயிலுக்குள் தவித்தபடி உள்ளார். கடந்த 3 நாட்களாக அவர் மதியம் உணவு சாப்பிடாமல் தவிர்த்து வருகிறார். டாக்டர்கள் எவ்வளவோ வலியுறுத்தியும் அவர் மதிய உணவு சாப்பிடவில்லை.

லாலு பிரசாத் யாதவுக்கு சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக அவர் மூன்று நேரமும் இன்சுலின் மருந்து எடுத்துக் கொள்கிறார். கடந்த 3 நாட்களாக அவர் மதிய உணவு சாப்பிடாததால் அவர் உடல்நிலையில் சற்று தளர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஜெயிலுக்குள் முன்பு எல்லாம் லாலு பிரசாத் கலகலப்பாக இருப்பார். பாராளுமன்ற தோல்விகாரணமாக அவர் அமைதியாகி விட்டார். பெரும்பாலான நேரங்களில் அவர் மவுனமாகவே இருக்கிறார்.

இதனால் அவரது குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர். லாலுவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். என்றாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்காததால் லாலுவின் சோகம் ஜெயிலுக்குள் தொடர்கிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of