சோகத்தில் மூழ்கிய இலங்கை, 321 -ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

397

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களிலும், நட்சத்திர ஹோட்டல்களிலும் அடுத்தடுத்து 9 இடங்களில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பு சம்பவங்களில் படுகாயமடைந்தவர்கள், கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிகிச்சை பலனின்றி, இதுவரை 321 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாத இயக்கத்தைச்சேர்ந்த 40 -பேர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம், இந்தகொடூரமான சதிச்செயலில் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of