ஒன்றாக சென்ற தாய் மற்றும் மகள்..! லாரி டிரைவர் செய்த கொடூரம்..!

532

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலை வாத்தியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சித்ரா. இவர் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

நேற்று தனது மகளை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற சித்ரா, குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அதிவேகமாக வந்த லாரி சித்ராவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், தாயும், மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் இருந்து சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.