பிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..!

861

பிக்-பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜுன் மாதம் 23-ஆம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எப்போதும் சும்மாக இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்களை, கடந்த சில நாட்களாகவே பிக்-பாஸ் பெண்டு நிமித்துகிறார். இதனிடையே நேற்று பிக்-பாஸ் வீட்டிலிருந்து சேரன் வெளியேற்றப்பட்டார்.

அவர் வெளியானதையடுத்து, பிக்-பாஸ் வீட்டில் தற்போது 6 பேர் உள்ளனர். டிக்கட் டூ பினாலே டாஸ்க்கில் முகென் வெற்றி பெற்றதால், அவர் நேரடியாகவே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்று விட்டார். இந்நிலையில் மீதமுள்ள 5 பேரும் நேரடியாக எவிக்ட் செய்யப்படுகின்றனர்.

அதில் யாரை காப்பாற்ற வேண்டும் என்று ஒவ்வொரு போட்டியாளரிடம் கன்பர்சன் ரூமில் பிக்-பாஸ் கேட்கிறார். லாஸ்லியா உள்ளே செல்லும் போது, நீங்கள் யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள் என்று கேட்க, கவினை என்று சொல்கிறார். அப்படியானால், நீங்கள் மிளகாயை சாப்பிட வேண்டும் என்று பிக்-பாஸ் கூறுகிறார். உடனே சிரித்துக்கொண்டே லாஸ்லியா மிளகாயை சாப்பிடுகிறார்.

இதையடுத்து தர்ஷன் உள்ளே செல்கிறார். அவரிடமும் அதே போல் கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு நான் ஷெரினை காப்பாற்ற நினைக்கிறேன் என்று கூறுகிறார். நீங்க அந்த மிளகாயை சாப்பிட வேண்டும் என்று பிக்-பாஸ் கூறுகிறார். கபார்னு மிளகாயை வாயில் எடுத்துப்போட்டுக்கொண்டு தர்ஷன் சாப்பிடுகிறார்.

பின்னர் வேறு யாரையாவது காப்பாற்ற விரும்புகிறீர்களா என்று பிக்பாஸ் கேட்க, சாண்டி அண்ணனை என்று இன்னொரு மிளகாயை சாப்பிடுகிறார். இதனை வைத்து பார்க்கும் போது, போட்டியாளர்களில் ஒருவரை எவிக்ட் ஆகாமல் காப்பாற்ற மற்ற போட்டியாளர்கள் மிளகாயை சாப்பிட வேண்டும் என்று பிக்-பாஸ் டாஸ்க் கொடுக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement