மருத்துவ படிப்புக்காக விண்ணப்பிக்க கடைசி  தேதி அறிவிப்பு

238

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி, எம்.எஸ்.சி உள்ளிட்ட மருத்துவம் சார் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க, செப்டம்பர் ஒன்றாம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், பி.எஸ்.சி, எம்.எஸ்.சி, எம்.பி.எச், பி.ஜி.டி, பி.ஜி.எப், பி.பீ.டி மற்றும் பி.எச்.டி படிப்புகள் உள்ளன. இந்த மருத்தும் சார் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பி.இ.டி, பி.ஜி.டி, பி.ஜி.எப், எம்.எஸ்.சி, எம்.பி.எச் படிப்புகளுக்கு வரும் செப்டம்பர் 22ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 3.30 வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஹால் டிக்கெட்டுகளை வரும் செப்டம்பர் 12 முதல் 22ஆம் தேதி வரை ஜிப்மர் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Advertisement