நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது. 2019ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு, நவம்பர் ஒன்றாம் தேதி முதல் www.ntaneet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30 என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், வயது உச்சவரம்பு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 7-ஆக மாற்றப்பட்டது. இதேபோல ஆன்-லைனில் கட்டணம் செலுத்த டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும், விவரங்களுக்கு www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of