மெக்ஸ்வெல்லை தூக்கி அடித்த ‘தோனி’.., எதுக்கு தெரியுமா?

537

ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியில் 3-வது வீரராக களமிறங்கிய மேக்ஸ்வெல், தலா 3 சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளை அடித்து இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்தார்.போட்டியின் 42 ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட மார்ஷ் கவர் திசையை நோக்கி அடித்தார். அங்கு நின்றுகொண்டிருந்த ஜடேஜா அருமையாக பந்தைத் தடுத்து, விக்கெட் கீப்பர் தோனியிடம் எறிந்தார்.

பந்தைப் பிடித்தால் வேகம் குறைந்துவிடும் என்பதால் அதை பிடிக்காமலேயே ஸ்டம்பிள் தட்டிவிட்டார். இதனை சற்றும் எதிர்பாராத மேக்ஸ்வெல் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of