கோப்பையை வெல்லப்போவது யார்…? இந்தியாவா? நியூசிலாந்தா? அனல் பறக்கும் கடைசி டி20

636

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி 5 ஒரு நாள் போட்டிகளில் 4-1 என்ற கணக்கில் மாபெரும் தோல்வியை நியூசிலாந்துக்கு பரிசலித்தது. இதனைத்தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது.

இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்றது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி ரன் மழையை கொட்டி தீர்த்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 219 ரன்களைக் குவித்தனர்.

இதைத்தொடர்ந்து 220 ரன் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி நியூசிலாந்தின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படு மோசமான தோல்வியை இந்திய அணி பதிவு செய்தது.

இந்த தோல்விக்கு இந்திய அணியின் தவறான அணித் தேர்வுத்தான் முக்கிய காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்தப் போட்டியில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்துப் பிரிவுகளிலும் சதபியதே தோல்விக்கு முக்கிய காரணம் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ஆக்லாந்தில் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், இந்திய அணி ஆரம்பம் முதலே தன்னுடைய அதிரடியான பந்து வீசின் மூலம் நியூசிலாந்து வீரர்களை பயப்படுத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 158 ரன்களை மட்டுமே எடுத்தது.

அதன் பின் 159 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோஹித் ஷர்மா ஆரம்பமுதலே ரன் மழையை கொட்டிதீர்த்தார். அவர் விக்கெட் இழந்த போதும் அடுத்து வந்த வீரர்களும் தங்களது அதிரடியை காட்டினர்.

இறுதியாக தல தோனி வெற்றி மிகவும் எளிதாக்கினார், இதனால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதித்து பதிலடி கொடுத்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் முதல் டி20 கிரிக்கெட் வெற்றியைப் பதிவு செய்தது.

இதில், சிறப்பம்சம் என்னவென்றால் முதல் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய அதே 11 வீரர்களே இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடினர்.

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் செய்த தவறுகளை இந்திய அணி இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் சரி செய்தது.

நடந்து முடிந்த இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி அடைந்துள்ளனர். இதனால், இந்த டி20 கிரிக்கெட் தொடரின் வெற்றியாளாரை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெறவுள்ளது.

ஹாமில்டன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமையும் என்பதால் இன்றைய போட்டியில் இரு அணியின் பந்துவீச்சாளர்களுக்கும் சற்று சவால் நிறைந்த ஆட்டமாகவே இருக்கும் என எதிர்பார்கக்ப்படுகின்றனர்.

இந்திய நேரப்படி இந்தப் போட்டி இன்று நண்பகல் 12.30 மணியளவில் போட்டி தொடங்குகிறது. ரோஹித் தலைமையில் இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 தொடரை வெல்லுமா என்பதே பல இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நியூசிலாந்த் சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரில் மோசமான தோல்வியடைந்த நிலையில், டி20 தொடரையாவது வென்று சமன் செய்ய வேண்டும் என்ற இக்குடான சூழலில் நியூசிலாந்த் அணி தள்ளப்பட்டுள்ளது.

இதனால் இன்றைய ஆட்டம் அனல் பறக்கும் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement